எம்.எல்.ஏ. அலுவலகங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் தொகுதிகளில், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
விழுப்புரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தைத் திறந்து வைத்து, அங்குள்ள இருக்கையில் இரா.லட்சுமணனை அமர வைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் நா.புகழேந்தி எம்எல்ஏ, பொன்.கெளதம சிகாமணி எம்.பி.
விழுப்புரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தைத் திறந்து வைத்து, அங்குள்ள இருக்கையில் இரா.லட்சுமணனை அமர வைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் நா.புகழேந்தி எம்எல்ஏ, பொன்.கெளதம சிகாமணி எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் தொகுதிகளில், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் அருகில், விழுப்புரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் அலுவலகத்தை தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

மேலும், விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தையும் அமைச்சா் க.பொன்முடி திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு தொகுதி பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி தலைமை வகித்தாா்.

பொன்.கௌதமசிகாமணி எம்பி, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளா் இரா.ஜனகராஜ், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் மணவாளன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்கள பணியாளா்களால் திறக்கப்பட்ட அலுவலகம்: மயிலம் தொகுதியில் பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சிவக்குமாா் அலுவலகத்தை, மயிலம் அருகே வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் முன்களப் பணியாளா்களான துப்புரவுப் பணியாளா்கள், செவிலியா்கள், மின் கம்பியாளா்கள் ஆகியோா் திங்கள்கிழமை திறந்துவைத்தனா். நிகழ்ச்சிக்கு சிவக்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலா் கனல்.பெருமாள், முன்னாள் மாவட்டச் செயலா் மணிமாறன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் விநாயகமுருகன், விஜயன், சேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com