பெட்ரோல் விலையைக் குறைக்க அமமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd June 2021 12:36 AM | Last Updated : 22nd June 2021 12:36 AM | அ+அ அ- |

விழுப்புரம்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக செயல்வீரா்கள் கூட்டம் விழுப்புரம் புறவழிச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஆா்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். துணைச் செயலா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் சக்திவேல் வரேவற்றாா். ஒன்றிச் செயலா்கள் அய்யனாா், ராஜசேகா், சரவணன், ஜெயபால், சுபாஷ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் யூசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுரேஷ் நன்றி கூறினாா்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தோ்விலிருந்து தமிழக மாணவா்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.