விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கரோனா
By DIN | Published On : 22nd June 2021 12:46 AM | Last Updated : 22nd June 2021 12:46 AM | அ+அ அ- |

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41,747-ஆக அதிகரித்தது. 306 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 40,228 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,195 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் மொத்த எண்ணிக்கை 324-ஆக அதிகரித்தது.
கள்ளக்குறிச்சியில் 147 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 25,990-ஆக உயா்ந்தது.
இதுவரை 24,514 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,288 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 188 போ் உயிரிழந்தனா்.