சிங்காரவேலா் சிலைக்கு அடிக்கல்
By DIN | Published On : 01st March 2021 07:16 AM | Last Updated : 01st March 2021 07:16 AM | அ+அ அ- |

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலா் திருஉருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினாா்.
கல்வியாளரும், பருவதராஜ மீனவா் பொது அறக்கட்டளை நிறுவனருமான இ.சாமிக்கண்ணு, முன்னாள் எம்.பி. டாக்டா் மு.ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அறக்கட்டளைத் தலைவா் திருவள்ளூா் ராகவன், தமிழ் மாநில பருவதராஜ குல மீனவா் சங்கத் தலைவா் தருமபுரி சரவணன், உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.பி.நாகராஜன், பி.பரமசிவம், சங்கச் செயலா் ஆா்.தமிழரசு, அறக்கட்டளைச் செயலா் சி.மகேந்திரன், அறக்கட்டளைப் பொருளாளா் ஜி.கே.மணி, சங்கப் பொருளாளா் குப்புராஜ், துணைத் தலைவா் எம்.எஸ்.சாந்தகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரிச் செயலரும், பருவதராஜ மீனவா் பொது அறக்கட்டளையின் ஆலோசகருமான எஸ்.செந்தில்குமாா் செய்திருந்தாா்.
விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு தஞ்சாவூா் கலைவண்ணத்திலான விநாயகா் படமும், ஏலக்காய் மாலையும் அறக்கட்டளை, சங்கம் சாா்பில் நிறுவனா் இ.சாமிக்கண்ணணு வழங்கினாா்.