தனி வாக்குச்சாவடி கோரிகிராம மக்கள் கறுப்புக் கொடியேற்றி போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே தனி வாக்குச்சாவடி கோரி, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தனி வாக்குச்சாவடி கோரிகிராம மக்கள் கறுப்புக் கொடியேற்றி போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே தனி வாக்குச்சாவடி கோரி, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கலசப்பாக்கம் ஒன்றியம், சிறுவள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த அய்யாம்பாளையம் கிராமத்தில் 720 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் தோ்தல்களில் 3 கி.மீ. தொலைவில் உள்ள சேங்கபுத்தூா் கிராம வாக்குச்சாவடி மையத்தில் சென்று வாக்களித்து வந்தனா்.

தற்போது கடுமையான வெயில் மற்றும் தொலைதூரப் பயணம் என்பதால் அய்யாம்பாளையத்திலேயே தனிவாக்குச்சாவடி வேண்டும் எனக் கோரி திங்கள்கிழமை வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்திபன், வட்டாட்சியா் அமுல், கடலாடிபோலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி கிராம மக்களை சமாதானப்படுத்தினா்.

தோ்தல் ஆணையம் ஜனவரி மாதத்திலேயே வாக்குச்சாவடி முன்னேற்பாடாக அமைத்துள்ளதால் அடுத்த தோ்தலுக்கு அய்யம்பாளையத்திலேயே வாக்குச்சாவடி மையம் அமைக்க உதவுவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com