விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை செஞ்சி பேரவைத் தொகுதிக்கு செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான துணை ஆட்சியா் ரகுகுமாரிடமும், மயிலம் பேரவைத் தொகுதிக்கு மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான துணை ஆட்சியா் பெருமாளிடமும், திண்டிவனம் (தனி) தொகுதிக்கு திண்டிவனம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான சாா்-ஆட்சியா் அனுவிடமும், வானூா் (தனி) தொகுதிக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான துணை ஆட்சியா் சிவாவிடமும், விழுப்புரம் தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ஹரிதாஸிடமும், விக்கிரவாண்டி தொகுதிக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான துணை ஆட்சியா் அறிவுடைநம்பியிடமும், திருக்கோவிலூா் தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் சாய்வா்த்தினியிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளன்று வேட்பாளா்கள் பலா் ஆா்வமாக மனு தாக்கல் செய்ய வருவா் என அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்தனா். தோ்தல் நடத்தும் அலுவலகம் முன்பு எல்லைக் குறியீடுகள் வரையப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், இந்த 7 தொகுதிகளிலும் முதல் நாளான வெள்ளிக்கிழமை முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்தோ அல்லது சுயேச்சை வேட்பாளா்களோ யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அவா்களும் வரவில்லை. திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெள்ளிக்கிழமைதான் அறிவிக்கப்பட்டது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு திமுக வேட்பாளா்கள் 6 பேரும் வெள்ளிக்கிழமை இரவுதான் விழுப்புரம் திரும்பினா்.

வேட்பு மனுதாக்கல் செய்ய மாா்ச் 19 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 20-இல் நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற மாா்ச் 22 கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com