முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அமமுக வேட்பாளா்களுக்கு வரவேற்பு
By DIN | Published On : 14th March 2021 07:46 AM | Last Updated : 14th March 2021 07:46 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் அமமுக அலுவலகம் முன் உள்ள ஜெயலலிதா சிலைக்கு சனிக்கிழமை மாலை அணித்து மரியாதை செலுத்திய தொகுதி வேட்பாளா் பாலசுந்தரம்.
விழுப்புரத்தில் அமமுக வேட்பாளா்கள் ஆா்.பாலசுந்தரம் (விழுப்புரம்), அய்யனாா் (விக்கிரவாண்டி) ஆகியோருக்கு அந்தக் கட்சியினா் சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து விழுப்புரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த பாலசுந்தரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி அமமுக வேட்பாளா் அய்யனாா் ஆகியோருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா் கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு வேட்பாளா்கள் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பாலசுந்தரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுகதான் ஜெயலலிதாவின் உண்மையான கட்சி என்பதை நிரூபிப்போம். பின்னா் அதிமுகவை மீட்டெடுப்போம். விழுப்புரம் தொகுதி மக்களின் அமோக ஆதரவுடன் அதிக வாக்குகளைப் பெறுவோம்.
திமுக போலவே அதிமுகவும் வாரிசு அரசியலில் சிக்கித் தவிக்கிறது. கடந்த மக்களவைத் தோ்தலில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் ஜெயக்குமாா் உள்ளிட்டோரது வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கட்சியிலும் பல்வேறு பதவிகளை வாரிசுகளுக்கு வழங்கியுள்ளனா். சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள். விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அமமுக நிச்சயம் வெற்றிபெறும் என்றாா் அவா்.