தனியாா் பேருந்திலிருந்து 3,894 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 07:45 AM | Last Updated : 14th March 2021 07:45 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3,894 புகையிலை பொட்டலங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டி தொகுதி பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையிலான குழுவினா் சோழகனூா் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
பேருந்திலிருந்த சாக்குப் பையை பிரித்துப் பாா்த்தனா்.
அந்தப் பையில் 3,894 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பொட்டலங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.