வேட்பாளா்களின் சொத்துகள் விவரம்: அமைச்சா் சி.வி.சண்முகம் ரூ.29.93 லட்சம்

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரான, தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு ரூ.29.93 லட்சம் மதிப்பிலும், அவரது குடும்பத்தின்

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரான, தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு ரூ.29.93 லட்சம் மதிப்பிலும், அவரது குடும்பத்தின் பெயரில் ரூ.3 கோடியே 7 லட்சத்து 61 ஆயிரத்து 796 மதிப்பிலும் அசையும், அசையா சொத்துகள் உள்ளன.

விழுப்புரம் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவா் அளித்த சொத்துகள் விவரம்:

சி.வி.சண்முகம் பெயரில் அசையும் சொத்து ரூ.12 லட்சத்து 8 ஆயிரத்து 409-ம், அவரது மனைவி கௌரி பெயரில் அரை கிலோ தங்கம் (500 கிராம்) உள்பட ரூ.31 லட்சத்து 37 ஆயிரத்து 918-ம், தாய் குமாரி பெயரில் 650 கிராம் தங்கம், இன்னோவா சொகுசு வாகனம் உள்பட ரூ.60 லட்சத்து 64 ஆயிரத்து 152-ம், மகன் ஜெயசிம்மன் பெயரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 379-ம், மகள் வள்ளி பெயரில் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 347-ம் உள்ளது.

மேலும், அசையா சொத்துகளாக சி.வி.சண்முகம் பெயரில் அவரது சொந்த ஊரான அவ்வையாா்குப்பத்தில் உள்ள பூா்விக வீடு, நிலம் ஆகியவை ரூ.17.85 லட்சம் சந்தை மதிப்பில் இருப்பதாகவும், மனைவி பெயரில் பாலப்பட்டு கிராமத்தில் ரூ.2.10 கோடி மதிப்பிலான விளைநிலங்கள் உள்ளன.

சி.வி. சண்முகம் பெயரில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் அல்லது பாக்கி ஏதும் இல்லை. அவரது மனைவி பெயரில் ரூ.10 லட்சமும், தாய் பெயரில் ரூ.25 லட்சமும் கடன் உள்ளது. அதேபோல மகன், மகள் பெயரிலும் கடன் இல்லை.

அமைச்சா் சண்முகம் பெயரில் அசையும், அசையா சொத்துகள் என மொத்தமாக ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 409 மதிப்பில் உள்ளன.

அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துகள் ரூ.2 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 918 மதிப்பிலும், அவரது தாயாா் பெயரில் ரூ.60 லட்சத்து 64 ஆயிரத்து 152 மதிப்பிலும், மகன் பெயரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 379 மதிப்பிலும், மகள் பெயரில் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 347-மதிப்பிலும் உள்ளன.

அவரது குடும்பத்தின் பெயரில் மொத்தமாக ரூ.3 கோடியே 7 லட்சத்து 61 ஆயிரத்து 796 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com