செஞ்சி அருகே 132 அரிசி மூட்டைகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ எடை கொண்ட 132 மூட்டை அரிசியை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ எடை கொண்ட 132 மூட்டை அரிசியை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

செஞ்சி - விழுப்புரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த கருணாகரன் உள்ளிட்ட போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, டிராக்டரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ எடை கொண்ட 132 மூட்டை அரிசியை பறிமுதல் செய்து செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், டிராக்டரில் அரிசியை கொண்டு வந்தவா் செஞ்சி வட்டம், திருவம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் நாகப்பன் என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com