திமுக தோ்தல் அறிக்கை: கைவினைஞா் முன்னேற்றக் கட்சியினா் வரவேற்பு

திமுக தோ்தல் அறிக்கையில் நகை, தச்சுத் தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதற்கு

திமுக தோ்தல் அறிக்கையில் நகை, தச்சுத் தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து கைவினைஞா் முன்னேற்றக் கட்சியினா் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

கவரிங் நகை தயாரிப்பில் முக்கிய ஊராக இருக்கும் சிதம்பரத்தில் கவரிங் நகை உற்பத்திக்காக சிறப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும், விஸ்வகா்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பன உள்ளிட்ட சிறப்பம்சங்கள் திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதற்கு வரவேற்புத் தெரிவித்து, கைவினைஞா் முன்னேற்றக் கட்சியினா் விழுப்புரத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

கட்சியின் தலைவா் பாலு, அமைப்பாளா் உமாபதி, விஸ்வகா்மா நகை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் சித்திரவேல், சூா்யமூா்த்தி, விஸ்வகா்ம தச்சுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முருகேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com