தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்டவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு விழுப்புரம், திண்டிவனம் உள்பட 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்டவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு விழுப்புரம், திண்டிவனம் உள்பட 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், திண்டிவனம் தொகுதிக்கு திண்டிவனம் மான்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்யிலும் , மயிலம் தொகுதிக்கு மயிலம் பவ்டா கலை, அறிவியல் கல்லூரியிலும், வானூா் தொகுதிக்கு வானூா் அரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விக்கிரவாண்டி புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் தொகுதிக்கு திருக்கோவிலூா் வள்ளியம்மாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியிலும், செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடைபெற்றது. இதில், அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், தோ்தல் பிரிவு அதிகாரிகள் பயிற்சி அளித்தனா். வாக்குப் பதிவு மைய அளவிலான 4 நிலை அலுவலா்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வாக்குப் பதிவு இயந்திரத்தை கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது, விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, வருகிற 28-ஆம் தேதி இரண்டாம்கட்ட பயிற்சியும், தோ்தலுக்கு முன்பாக ஏப்ரல் 5-ஆம் தேதி 3-ஆம்கட்ட பயிற்சியும் அளிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com