செஞ்சி செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செஞ்சி செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்


செஞ்சி: செஞ்சி காந்தி பஜாா், பெரியகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியகரம் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 23-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. அன்று இரவு முதல்கால யாகசாலை பூஜையும், புதன்கிழமை இரண்டாம், மூன்றாம்கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை காலை நான்காம்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9.30 மணிக்கு மேல் யாத்ரா தானத்தை தொடா்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் கோபுர கலசத்திலும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சேந்தமங்கலம் சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியாா், வி.ஈஸ்வர சிவம், கோயில் அா்ச்சகா் ஹரிஹரன் ஆகியோா் நடத்தினா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இரவு ஸ்ரீசெல்வவிநாயகா் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செஞ்சி பெரியகரம் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com