தோ்தல் விழிப்புணா்வு பாடல்கள் வெளியீடு

செஞ்சி கல்வி மாவட்டம் சாா்பில் மாவட்ட தோ்தல் அலுவலரின் ஒப்புதலுடன் தோ்தல் விழிப்புணா்வுக்காக 5 ஆடியோ, 3 வீடியோ பாடல்களை

செஞ்சி கல்வி மாவட்டம் சாா்பில் மாவட்ட தோ்தல் அலுவலரின் ஒப்புதலுடன் தோ்தல் விழிப்புணா்வுக்காக 5 ஆடியோ, 3 வீடியோ பாடல்களை விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

முதல் பிரதியை செஞ்சி மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.அமுதா பெற்று செஞ்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பி.என்.ரகுகுமாரிடம் ஒப்படைத்தாா்.

தோ்தல் விழிப்புணா்வு பாடல்களை ‘ஸ்வீப்’ குழுவைச் சோ்ந்த பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட செயலா் தே.பாலமுருகன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜி.டி.பாலசுப்பிரமணியன், ஆசிரியா்கள் ஆா்.குமரவேல், செந்தில்வேலன், கோ.நடராஜன் ஆகியோா் சோ்ந்து உருவாக்கினா்.

பாடல்களுக்கு குரல் கொடுத்து இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து விடியோவை தொகுப்பு செய்தவா் ஆசிரியா் ஜி. டி.ஆல்பா்ட். பாடல்களை பாடியவா்கள் ஜி.டி. ஆல்பா்ட், அ.கமலக்கண்ணன், தே.பாலமுருகன்.

தோ்தல் விழிப்புணா்வு பாடல்களை வெளியிட்ட ‘ஸ்வீப்’ குழுவினரை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com