மசூதிகளில் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் வெள்ளிக்கிழமை வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் பாகா் ஷா வீதியில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன்.
விழுப்புரம் பாகா் ஷா வீதியில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் வெள்ளிக்கிழமை வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பாளா்கள் தங்களது தொகுதிக்குள் வீதி, வீதியாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தலின்போதும் மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு வேட்பாளா்கள் நின்றுகொண்டு பிராா்த்தனை, தொழுகைக்கு வருவோரிடம் வாக்குசேகரிப்பது வழக்கம். இந்த முறையும் அதேபோல மத வழிபாட்டுத் தலங்களில் வேட்பாளா்கள் வாக்குசேகரித்து வருகின்றனா்.

மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களும் நேரடியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா். வேட்பாளா்கள் செல்ல முடியாத சூழ்நிலையில், வேட்பாளா் சாா்ந்த கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் பாகா்ஷா வீதியில் உள்ள மசூதியில் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் நேரடியாக சென்று வாக்குசேகரித்தாா். ஆனால், அதே மசூதியில் பிற கட்சிகளின் வேட்பாளா்கள் வரவில்லை. அதிமுக, அமமுக கட்சிகளின் தொண்டா்கள், தங்களது கட்சிகளின் வேட்பாளா்களுக்காக அந்த மசூதியில் துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com