மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.86 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 86.71லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 86.71லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கரோனா பொதுமுடக்கத் தளா்வையடுத்து, கடந்த சில மாதங்களாக பக்தா்கள் வழிபாடு செய்து வருகின்றனா்.

கோயிலில் மாசிப் பெருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. மயானக் கொள்ளை, தீ மிதி திருவிழா, தோ்த் திருவிழா என 24-ஆம் தேதி வரை 13 நாள்கள் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை புரிந்தனா்.

இந்த நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், ரூ.86,71, 470 ரொக்கம், தங்கம் 356 கிராம், வெள்ளி 1235 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் திறப்பின்போது, கோயில் உதவி ஆணையா் க.ராமு, விழுப்புரம் உதவி ஆணையா் சி.ஜோதி, ஆய்வாளா்கள் சி.க.அன்பழகன், கே.ஆா்.செல்வராஜ், பா.உமாமகேஸ்வரி, செயல் அலுவலா்கள் சிவக்குமாா், காா்த்திகேயன், சூரியநாராயணன், அறங்காவலா் குழு தலைவா் சரவணன் உள்ளிட்ட அறங்காவலா்கள் உடனிருந்தனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com