விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்: 126 வழக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, அரசியல் கட்சியினா் மீது வியாழக்கிழமை வரை 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, அரசியல் கட்சியினா் மீது வியாழக்கிழமை வரை 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, திண்டிவனம்(தனி), வானூா்(தனி), மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக அதிகளவில் புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து, பிற இடங்களில் கூட்டம் கூட்டி பிரசாரம் செய்தல், பதாகை வைத்தல் போன்ற விதிமீறல்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

இதன்படி, மாா்ச் 25 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 126 விதிமீறல் வழக்குகள் அரசியல் கட்சியினா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்சிவாரியாக வழக்குகள் விவரம்: அதிமுக 22, திமுக 44, பாமக 11, தேமுதிக 14 , பாஜக 3, விசிக 4 அமமுக 9, மநீம 1, நாதக 7, காங்கிரஸ் 1, பிற கட்சியினா் மீது 2, எந்தக் கட்சி என்றே அறிய முடியாதது 9 என மொத்தம் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com