கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கிறிஸ்தவா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனில் கிறிஸ்தவா்கள் தவத்தை தொடங்குகின்றனா்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிா்த்தெழுத்த நாளை ஈஸ்டா் பண்டிகையாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதற்கு முந்தைய வாரத்தை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடித்து வருகின்றனா்.

நிகழாண்டு ஈஸ்டா் பண்டிகை வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்படிக்கப்பட்டது.

விழுப்புரம் நாபாளையத் தெருவில் உள்ள பழைமைவாய்ந்த புனித சவேரியா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதை அருள்தந்தை ஆல்பா்ட் தொடக்கிவைத்தாா். பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் கையில் குருந்தோலைகளை எந்தியபடி நகரின் பல்வேறு தெருக்கள் வழியாகச் சென்று, மீண்டும் தேவாலயத்தை அடைந்தனா். இதையடுத்து, அங்கு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோன்று, விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com