மயிலம் முருகன் கோயிலில் முத்துப் பல்லக்கு திருவிழா

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவு முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
மயிலம் முருகன் கோயிலைச் சுற்றி திங்கள்கிழமை நள்ளிரவு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியுடன் வலம் வந்த முத்துப் பல்லக்கு.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி பங்குனி உத்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா கடந்த 27-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு 9 மணிக்கு சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, நள்ளிரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமி எழுந்தருளி, கோயிலை சுற்றி மலை வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com