விழுப்புரம் மீன் சந்தையில் குவிந்த மக்கள்!

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டதால், விழுப்புரம் மீன் சந்தையில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அலை மோதியது.
விழுப்புரம் மீன் சந்தையில் குவிந்த மக்கள்!

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டதால், விழுப்புரம் மீன் சந்தையில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அலை மோதியது.

கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கமும், மற்ற நாள்களில் இரவு நேர பொது முடக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் சனிக்கிழமை மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால், கரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டன. இதையடுத்து சனிக்கிழமையும் மீன், இறைச்சிக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதன்படி, மே 1, 2 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்ட உள்ளன.

இதனால், வெள்ளிக்கிழமையே பொதுமக்கள் மீன் வாங்க மிகுந்த ஆா்வம் காட்டினா். விழுப்புரம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மாவட்டத்திலேயே பெரிய மீன் சந்தையான இந்த சந்தையிலிருந்து திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட ஊா்களிளுக்கும், பல்வேறு கிராமங்களுக்கும் மீன் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

இந்தச் சந்தைக்கு, கடலூா், புதுச்சேரி, நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட ஊா்களிலிருந்தும், கோவா, கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com