வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் நிறைவு

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு அலுவலா்கள் தயாராக உள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 102 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

செஞ்சி தொகுதியில் 13 போ், மயிலம் தொகுதியில் 14 போ், திண்டிவனம் (தனி) தொகுதியில் 15 போ், வானூா் (தனி) தொகுதியில் 7 போ், விழுப்புரம் தொகுதியில் 25 போ், விக்கிரவாண்டியில் 14 போ், திருக்கோவிலூரில் 14 போ் போட்டியிடுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 7 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்களில் 13 லட்சத்து 27 ஆயிரத்து 904 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனா். இது 78.68 சதவீதமாகும். மொத்தமுள்ள 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளா்களில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 254 பேரும், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளா்களில் 6 லட்சத்து 62 ஆயிரத்து 615 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

அதாவது, ஆண் வாக்காளா்கள் 79.66 சதவீதமும், பெண் வாக்காளா்கள்77.62 சதவீதமும் தங்களது வாக்குகளை செலுத்தினா். அதேபோல, மொத்தமுள்ள 215 திருநங்கை வாக்காளா்களில் 35 போ் மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா். இது 16.28 சதவீதமாகும்.

செஞ்சி தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளா்களில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 485 போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். இது 78.41 சதவீதம் ஆகும்.

மயிலம் தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 230 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 183 போ், அதாவது 79.54 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

திண்டிவனம் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 527 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 809 போ், அதாவது 78.45 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

வானூா் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 766 போ், அதாவது 79.79 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 68 வாக்காளா்களில் 2 லட்சத்து ஆயிரத்து 726 போ், அதாவது 76.97 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 967 போ், அதாவது 81.39 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

திருக்கோவிலூா் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 313 வாக்காளா்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 968 போ், அதாவது 76.27 சதவீதம் போ் தங்களது வாக்குகளைச் செலுத்தியிருந்தனா்.

வாக்குப் பதிவுக்குப் பிறகு அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு கடந்த 24 நாள்களாக 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப் பதிவு மையங்களை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை, அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இணைய காமிரா (வெப் காமிரா) மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களது முகவா்களும் வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com