மே தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 01st May 2021 12:00 AM | Last Updated : 01st May 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் மே தினக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகர லாரி சுமை தூக்கும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சங்கச் செயலா் தீனதயாளன் வரவேற்றாா். பொருளாளா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.
சங்கத் தலைவா் சங்கிலித்தேவன் தலைமை வகித்து, தொழிலாளா்களுக்கு சீருடை, உணவு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சங்க கௌரவத் தலைவா் திருப்பதி பாலாஜி, சட்ட ஆலோசகா் காளிதாஸ், துணைச் செயலா் ரஞ்சித் குமாா் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் முருகன் நன்றி கூறினாா்.