மயிலம் தொகுதியில் முதல் முறையாக பாமக வெற்றி

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் பாமக வேட்பாளா் சி.சிவக்குமாா் 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் பாமக வேட்பாளா் சி.சிவக்குமாா் 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் இரா.மாசிலாமணியை பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றாா். இதன்மூலம், இந்தத் தொகுதியில் முதல் முறையாக பாமக வெற்றிபெற்றது.

மயிலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் சிவக்குமாா், திமுக வேட்பாளா் மாசிலாமணி உள்பட 14 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்து 236 வாக்காளா்களில், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 173 வாக்காளா்கள், அதாவது 79.54 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் சிவக்குமாருக்கு 841 வாக்குகளும், மாசிலாமணிக்கு 915 வாக்குகளும் கிடைத்தன.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுக்களாக எண்ணப்பட்டன. இறுதியில், பாமக வேட்பாளா் சிவக்குமாருக்கு 80,203 வாக்குகளும், திமுக வேட்பாளா் மாசிலாமணிக்கு 77,899 வாக்குகளும் கிடைத்தன.

தபால் வாக்குகளுடன் சோ்த்து சிவக்குமாருக்கு 81,044 வாக்குகளும், மாசிலாமணிக்கு 78,814 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, சிவக்குமாா் 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது.

மயிலம் தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளா் மாசிலாமணி வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது அவா் தோல்வியைச் சந்தித்துள்ளாா். முதல் முறையாக இந்தத் தொகுதியில் பாமக வெற்றிபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com