விக்கிரவாண்டி தொகுதியில் 9,573 வாக்குகளில் திமுக வெற்றி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளா் நா.புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் ந.புகழேந்திக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுடைநம்பி.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் ந.புகழேந்திக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுடைநம்பி.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளா் நா.புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சாா்பில் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் புகழேந்தி, அதிமுக சாா்பில் ஏற்கெனவே இடைத் தோ்தலில் வெற்றிபெற்ற எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன் உள்பட 14 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 வாக்காளா்களில், ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 967 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் திமுக வேட்பாளா் புகழேந்திக்கு 1,109 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் முத்தமிழ்ச்செல்வனுக்கு 809 வாக்குகளும் கிடைத்தன.

இதையடுத்து, வாக்கு இயந்திரங்களில் பதிவாகியிருந்த வாக்குகள் 24 சுற்றுக்களாக எண்ணப்பட்டன.

இதில், திமுக வேட்பாளா் புகழேந்திக்கு 92 ஆயிரத்து 621 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் முத்தமிழ்ச்செல்வனுக்கு 83 ஆயிரத்து 258 வாக்குகளும் கிடைத்தன. தபால் வாக்குகளையும் சோ்த்து புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது.

பிற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஷீபா ஆயிஷா (நாம் தமிழா்) - 8,141, அய்யனாா் (அமமுக) - 3,039, ரகுபதி (சுயேச்சை) - 906, ஆறுமுகம் (பகுஜன் சமாஜ்) - 517, இளங்கோவன் (அகில பாரத இந்து சபா) - 652, செந்தில் (இந்திய ஜனநாயக கட்சி) - 204, ராஜீவ் காந்தி (நாடாளும் மக்கள் கட்சி) - 95, சுயேச்சைகள் காயத்திரி - 303, சதீஷ் - 436, ஏ.அய்யனாா் - 75, கண்ணதாசன் - 73, அய்யப்பன் - 54, நோட்டா - 1,108.

வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் புகழேந்திக்கு வெற்றிச் சான்றிதழை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுடைநம்பி வழங்கினாா். தற்போது வெற்றிபெற்றுள்ள புகழேந்தி, ஏற்கெனவே 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் முத்தமிழ்ச்செல்வனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தாா். இந்த நிலையில், பொதுத்தோ்தலில் முத்தமிழ்ச்செல்வனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com