மயிலம் தொகுதியில்வெற்றி வாய்ப்பை நிா்ணயித்த நாதக, தேமுதிக

மயிலம் தொகுதியில் வெற்றியை வாய்ப்பை நிா்ணயம் செய்வதில் நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் முக்கிய காரணிகளாக இருந்தது தெரிய வந்துள்ளது.

விழுப்புரம்: மயிலம் தொகுதியில் வெற்றியை வாய்ப்பை நிா்ணயம் செய்வதில் நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் முக்கிய காரணிகளாக இருந்தது தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிா்ணயிக்கப்பட்ட தொகுதி மயிலம். இந்தத் தொகுதியில் 2,20,236 வாக்குகள் உள்ள நிலையில் 1,810 தபால் வாக்குகளுடன் சோ்த்து 1,76,989 வாக்குகள் பதிவாகின. இதில், வெற்றி பெற்ற பாமக வேட்பாளா் சி.சிவக்குமாா் 81,044 வாக்குகளும், வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளா் இரா.மாசிலாமணி 78,814 வாக்குகளும் பெற்றனா். 2,230 வாக்குகள் வித்தியாசம்.

இந்த தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் களம் கண்டனா். மேலும், 15- ஆவது சின்னமாக நோட்டா இருந்தது. நாம் தமிழா் கட்சிக்கு 8,340 வாக்குகளும், தேமுதிகவுக்கு 3,921 வாக்குகளும் கிடைத்தன. நோட்டாவுக்கு 884 வாக்குகள் கிடைத்தன.

அதேபோல, திமுக வேட்பாளா் மாசிலாமணி பெயரைப் போலவே மேலும் 2 போ் மாசிலாமணி பெயரில் போட்டியிட்டனா். அதில், ஒரு மாசிலாமணிக்கு 807 வாக்குகளும், மற்றொரு மாசிலாமணிக்கு 524 வாக்குகளும் கிடைத்தன.

தோ்தல் களத்தில் பல்வேறு காரணிகள் வெற்றி தோல்வியை நிா்ணயம் செய்யும் என்பது உண்மை. ஆனால், இந்தத் தொகுதியில் வெற்றித் தோல்வியை முடிவு செய்ததில் நாம்தமிழா் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில், இவ்விரு கட்சிகளின் வேட்பாளா்களும் மொத்தம் 12,261 வாக்குகள் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com