விழுப்புரம் மாவட்டத்தில்மேலும் 2 போ் கரோனாவுக்கு பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை வரை 19,642 போ் பாதிக்கப்பட்டனா். 17,370 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 123 போ் உயிரிழந்தனா். 2,149 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

20ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு: இந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 396 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 20,038-ஆக அதிகரித்துள்ளது. 209 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,579-ஆக அதிகரித்தது. 2,334 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 2 போ் பலி: இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, கோவிந்தம்மாள் நகரைச் சோ்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபா் உயிரிழந்தாா்

இதேபோல, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஜக்கம்பேட்டையைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபா் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 125-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com