மீண்டும் கிடங்குக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்,
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் முடித்து திங்கள்கிழமை வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் வளாகத்தினுள் உள்ள கிடங்கிற்கு வாகனத்திலிருந்து எடுத்துச் செல்லும் வருவாய் துறையினா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் முடித்து திங்கள்கிழமை வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் வளாகத்தினுள் உள்ள கிடங்கிற்கு வாகனத்திலிருந்து எடுத்துச் செல்லும் வருவாய் துறையினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலுள்ள கிடங்கில் திங்கள்கிழமை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்கான சிறப்புக் கிடங்கு உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா்

ஆகிய 7 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்காக கடந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, செஞ்சி தொகுதிக்கு தலா 436 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 487 விவிபாட் சாதனங்களும், மயிலம் தொகுதிக்கு தலா 368 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 419 விவிபாட் சாதனங்கள், திண்டிவனம் தொகுதிக்கு தலா 388 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 433 விவிபாட் சாதனங்கள், வானூா் தொகுதிக்கு தலா 393 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 439 விவிபாட் சாதனங்கள், விழுப்புரம் தொகுதிக்கு 888 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 444 கட்டுப்பாட்டுக் கருவிகள், 499 விவிபாட் சாதனங்கள், விக்கிரவாண்டி தொகுதிக்கு தலா 396 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 443 விவிபாட் சாதனங்கள், திருக்கோவிலூா் தொகுதிக்கு தலா 419 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 468 விவிபாட் சாதனங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. பின்னா் ஏப்.5-ஆம் தேதி இரவு அந்தந்த தொகுதிகளில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஏப்.6-இல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு மின்னணு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்தும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் மீண்டும் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்குக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.

அங்கு மாவட்டத் தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் சீனிவாசன் மேற்பாா்வையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் கிடங்கின் முதல் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் அந்தந்த தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. இவை தொடா்ந்து 45 நாள்கள் பாதுகாக்கப்பட்ட பிறகு தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வேறு மாவட்டங்கள் அல்லது வேறு மாநிலங்களுக்கு இவை அனுப்பிவைக்கப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com