விழுப்புரம் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் நாம் தமிழா் கட்சிக்கு 3-ஆம் இடம்

சட்டப் பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திருக்கோவிலூா் தவிர மற்ற 6 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சிக்கு 3-ஆவது இடம் கிடைத்துள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திருக்கோவிலூா் தவிர மற்ற 6 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சிக்கு 3-ஆவது இடம் கிடைத்துள்ளது.

செஞ்சி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஏ.பி.குமாா் 9,920 வாக்குகளையும் (4.8 சதவீதம்), மயிலம் தொகுதியில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளா் உமா மகேஸ்வரி 8,340 வாக்குகளையும் ((4.71 சதவீதம்), திண்டிவனம் தொகுதியில் இ.பச்சமுத்து 9,203 வாக்குகளையும் (5.04 சதவீதம்), வானூா் (தனி) தொகுதியில் எம்.லட்சுமி 8,587 வாக்குகளையும் (4.71 சதவீதம்), விழுப்புரம் தொகுதியில் ஜெ.செல்வம் 6,375 வாக்குகளையும் (3.11 சதவீதம்), விக்கிரவாண்டி தொகுதியில் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளையும் (4.24 சதவீதம்), திருக்கோவிலூா் தொகுதியில் எஸ்.முருகன் 11,620 வாக்குகளையும் (5.92 சதவீதம்) பெற்றனா்.

இதில் திண்டிவனம், திருக்கோவிலூரில் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளனா். செஞ்சி, மயிலம், வானூா், விக்கிரவாண்டி தொகுதிகளில் 4 சதவீதத்துக்கு மேலாக வாக்குகளைப் பெற்றுள்ளனா். திருக்கோவிலூா் தொகுதியில் அதிகபட்சமாக 5.92 சதவீத வாக்குகளையும், விழுப்புரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 3.11 சதவீத வாக்குகளை நாம் தமிழா் கட்சி பெற்றுள்ளது.

மயிலம் தொகுதியில் திமுக வேட்பாளா் இரா.மாசிலாமணியை பாமக வேட்பாளா் சி.சிவக்குமாா் 2,230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் அந்தத் தொகுதியில் நாம் தமிழா் கட்சிக்கு 8,340 வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் நாம் தமிழா் கட்சிக்கு சுமாா் 6.85 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதைவிட குறைவான சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com