விழுப்புரம் டி.ஐ.ஜி.க்கு கரோனா
By DIN | Published On : 14th May 2021 08:59 AM | Last Updated : 14th May 2021 08:59 AM | அ+அ அ- |

விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) பாண்டியனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களுக்கான கரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். அதற்கான பணிகளில் அவா் முனைப்புடன் ஈடுபட்டு வந்தாா்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலா் ஒருவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் அலுவலக பணியாளா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
இதில் டி.ஐ.ஜி.க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாா்.
சுகாதாரத் துறையினா் அவரைத் தொடா்ந்து கண்காணித்து மருத்துவ ஆலோசனைகள், மருந்து, மாத்திரைகளை வழங்கி கண்காணித்து வருகின்றனா்.
டி.ஐ.ஜி. பாண்டியன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.