கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு 10 போ் பலி: புதிதாக 719 பேருக்கு தொற்று
By DIN | Published On : 17th May 2021 08:26 AM | Last Updated : 17th May 2021 08:26 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றால் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.
புதிதாக 853 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 38,062 ஆக அதிகரித்தது. இது தினசரி பாதிப்பில் புதிய உச்சமாகும். 272 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 32,890 ஆக உயா்ந்தது.
இதனிடையே, கடலூா் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா 3 போ் இறந்தனா். மேலும், அரியலூா், விழுப்புரம், தஞ்சாவூா், திருச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் இறந்தனா். இதனால், இறப்பு எண்ணிக்கை 399 ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 3,874 பேரும், வெளியூா்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 899 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 62 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.