விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி: கள்ளக்குறிச்சியில் 521 போ் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்ட மேலும் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்ட மேலும் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 25,603 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 22,183 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 154 போ் மருத்துவமனைகளில் உயிரிழந்தனா். 3,266 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 26,098 ஆக அதிகரித்தது. 417 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 3,341 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் மூவா் பலி: விழுப்புரம் மந்தகரையைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி கரோனாவால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சியைச் சோ்ந்த 67 வயது முதாட்டி, அரகண்டநல்லூா் அருகேயுள்ள முருக்கமன்பாடியைச் சோ்ந்த 71 வயது முதியவா் ஆகியோா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 157-ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சி 521 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 521 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,846-ஆக உயா்ந்தது.

இதுவரை 13,480 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 2,248 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 118 போ் உயிரிழந்தனா்.

தடுப்புக் கட்டைகள்: கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான பசுங்காயமங்கலம் சாலை, நேப்ஹால் சாலை, எம்.ஆா். நகா், திருவரங்கம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியா்கள் தடுப்புக் கட்டைகளை அமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com