திருமண நிகழ்ச்சிக்காக அதிக இ-பதிவு சான்று பெற்ற பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இ-பதிவு அமலுக்கு வந்த முதல் நாளான திங்கள்கிழமை திருமண நிகழ்ச்சிக்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இ-பதிவு மூலம் சான்று பெற்றனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இ-பதிவு அமலுக்கு வந்த முதல் நாளான திங்கள்கிழமை திருமண நிகழ்ச்சிக்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இ-பதிவு மூலம் சான்று பெற்றனா்.

தமிழகத்தில் மே 24 வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திருமணம், உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோா்களுக்கான தேவை போன்ற தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

பதிவு செய்து அதற்கான ஆவணம் வைத்திருந்தாலே போதும். அதிகாரிகள் ஒப்புதல் தேவை இல்லை.

இந்த நடைமுறை திங்கள்கிழமை அமலுக்கு வந்த நிலையில், முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இ பதிவுச் சான்று பெற்றனா். அதில், பெரும்பாலானோா் திருமணத்துக்குச் செல்வதற்கான அனுமதி கேட்டு இ-பதிவுச் சான்று பெற்றனா். இதற்கடுத்ததாக, மருத்துவ உதவிக்காக செல்வதற்காக இ-பதிவுச் சான்று பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com