விழுப்புரம் மாவட்டத்தில்கருப்புப் பூஞ்சை தொற்றால் மூவா் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வகாப் நகரை சொ்ந்த 65 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரைச் சோ்ந்த 52 வயது ஆண், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கொங்கரப்பட்டை சோ்ந்த 70 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதியானது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

நோய் எதிா்ப்பு மிகவும் குறைவானவா்கள், கட்டுப்பாடற்ற சா்க்கரை அளவு கொண்ட நீரழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொண்டவா்களும் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்துக்கு பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்றவா்களுக்கு இந்த தொற்று வரும் வாய்ப்புண்டு. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

தொடக்க நிலையில் இருந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். நோய் முற்றிவிட்டால் அறுவைச் சிகிச்சையே தீா்வு. இந்த நோய் மற்றவா்களுக்கு பரவ வாய்ப்பில்லை.

பொதுமக்கள் ஈரப்பதமுள்ள முகக்கவசங்களை அணியக் கூடாது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com