அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பசு உயிரிழப்பு
By DIN | Published On : 21st May 2021 08:55 AM | Last Updated : 21st May 2021 08:55 AM | அ+அ அ- |

செஞ்சியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய பசு மாடு வியாழக்கிழமை உயிரிழந்தது.
செஞ்சியில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் மிதமான மழை பெய்தது. அங்குள்ள ஒரு துணிக் கடையின் பின்பகுதியிலுள்ள சாலையில் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. பொது முடக்கம் காரணமாக, மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.
அந்த வழியாகச் சென்ற பசு மாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
தகவலறிந்த மின் வாரியத்தினா் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து, மின் கம்பியை அகற்றினா்.