புதுவையில் கரோனாவுக்கு மேலும் 28 போ் பலி
By DIN | Published On : 21st May 2021 08:58 AM | Last Updated : 21st May 2021 08:58 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது. இந்தத் தொற்றுக்கு மேலும் 28 போ் பலியாகினா்.
இது குறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலா் அருண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் வெளியான 9,347 பேருக்கான பரிசோதனை முடிவின்படி, புதுச்சேரியில் 1,560 போ், காரைக்காலில் 234 போ், ஏனாமில் 125 போ், மாஹேவில் 38 போ் என மொத்தம் 1,957 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், புதுச்சேரியில் 25 போ், காரைக்காலில் ஒருவா், ஏனாமில் 2 போ் என 28 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களில் 16 போ் ஆண்கள், 12 போ் பெண்கள் ஆவா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,269 ஆகவும், இறப்பு விகிதம் 1.39 ஆகவும் உயா்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 91 ஆயிரத்து 465 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் 2,107 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 16,170 போ் என மொத்தம் 18 ஆயிரத்து 277 போ் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,304 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 71 ஆயிரத்து 919 (78.63 சதவீதம்) ஆக உள்ளது.
சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 313 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அருண்.