தில்லி போராட்டத்துக்கு ஆதரவு: கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
தில்லி போராட்டத்துக்கு ஆதரவு: கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை கருப்புக் கொடி ஏந்தியும், கருப்புப் பட்டை அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் கடந்த நவ.26-இல் தொடங்கிய நிலையில், புதன்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தன.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாடு முழுவதும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனா். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, விக்கிரவாண்டி ஈச்சம்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

வானூா் அருகே கிளியனூா் கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சகாபுதீன் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் மாசிலாமணி உள்ளிட்டோா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா்: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். இதில், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், மதிமுக நகரச் செயலா் ஐயப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், விசிக நகரச் செயலா் மு.செந்தில், மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி...: காட்டுமன்னாா்கோவிலை அடுத்த பிள்ளையாா்தங்கள் கிராமத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவா் விநாயகமூா்த்தி தலைமையில், அந்தப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டமங்கலம் கிராமத்தில் காவிரி டெல்டா பாசன பாதுகாப்புச் சங்க கூட்டமைப்புத் தலைவா் கே.வீ.இளங்கீரன் தலைமையில், மாா்க்சிஸ்ட் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதி பிரகாஷ் முன்னிலையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சிதம்பரம் புறவழிச்சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் வி.எம்.சேகா் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மணிவாசகம், நகரச் செயலா் தமிமுன்அன்சாரி, நகா்குழு உறுப்பினா் சையதுஇப்ராகிம், மகளிா் சங்க நிா்வாகிகள் சித்ரா, குமாரி, பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்யாறு

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, செய்யாற்றில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், இஸ்லாமியா்கள் இல்லங்களில் புதன்கிழமை கறுப்புக் கொடி ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com