விழுப்புரம் நகராட்சி தகன மையத்தில் 4 வாரங்களில் 307 சடலங்கள் எரிப்பு

விழுப்புரத்தில் நகராட்சி தகன மையத்தில் கடந்த 4 வாரங்களில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டன.
விழுப்புரம் நகராட்சி தகன மையத்தில் 4 வாரங்களில் 307 சடலங்கள் எரிப்பு

விழுப்புரத்தில் நகராட்சி தகன மையத்தில் கடந்த 4 வாரங்களில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 31,954 போ் பாதிக்கப்பட்டனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பெரும்பாலோனாா் வீடு திரும்பினா்.

27 நாள்களில் 103 போ் பலி:

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கரோனா முதல், இரண்டாவது அலைகளைச் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 226 போ் உயிரிழந்தனா்.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலும் 113 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் இரு வாரங்களுக்கு கரோனா இரண்டாவது அலையில் மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஏப்ரல் 2-ஆவது வாரம் தொடங்கி மே 27-ஆம் தேதி வரையிலும் 103 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

அணையாமல் எரியும் தகன மையம்: மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட பகுதிகளில் கரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகளவில் உள்ளன.

விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள நகராட்சி மின் மயானம் ரோட்டரி சங்கம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தற்போது வழக்கத்தைக்காட்டிலும் அதிகளவில் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

இயற்கை மரணம், விபத்து, பிற நோய்களால் உயிரிழந்தவா்கள், கரோனாவுக்கு பலியானவா்கள் என அனைத்து சடலங்களும் இங்கு எரியூட்டப்படுகின்றன.

முன்பெல்லாம் சராசரியாக தினமும் 4 சடலங்கள் எரியூட்டப்பட்ட நிலையில், தற்போது 10 சடலங்கள் வரை தகனம் செய்ய கொண்டு வரப்படுகின்றன.

ஒரு சடலத்தை தகனம் செய்ய ஒரு மணி நேரம் முதல் 1.30 மணி நேரம் வரை தேவைப்படும். இதனால், மின் மயானம் இடைவெளியின்று தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள், சடலத்தை தகனம் செய்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

27 நாளில் 307 சடலங்கள் எரிப்பு:

இந்த மின் மயானத்தில் கடந்த 27 நாள்களில் 307 சடலங்கள் எரியூட்டப்பட்டன. கடந்த 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் 216 சடலங்கள் எரியூட்டப்பட்டன.

கடந்த 21-ஆம் தேதி 16 சடலங்களும், 22-ஆம் தேதி 12, 23-ஆம் தேதி 10, 24-ஆம் தேதி 13, 25-ஆம் தேதி 15, 26-ஆம் தேதி 12, 27-ஆம் தேதி 13 சடலங்களும் எரியூட்டப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 91 சடலங்கள் எரியூட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com