கரோனா தடுப்பூசி: அமைச்சா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி இல்லையென பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி இல்லையென பொதுமக்கள் யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது என்று மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் அருகே கோலியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தவா்களின் எண்ணிக்கை, தடுப்பூசி இருப்பு, பொது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள் இருப்பு குறித்து அங்கிருந்த மருத்துவா்கள், அதிகாரிகளிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவா்களை திருப்பி அனுப்பாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். கோவிஷீல்ட், கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் கேட்டு, அதன் தன்மையைப் புரிய வைத்து தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று அமைச்சா் பொன்முடி அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com