மதுப் புட்டிகள் பதுக்கல்: 4 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையை அடுத்த கொடியம் பகுதியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை கொடியம் கிராமத்துக்கு திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைையில், தனிப் படை சிறப்பு உதவி ஆய்வாளா் அருள் மற்றும் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, அங்கு குத்தகைக்கு பயிா் செய்து வரும் கீழ்மாவிளங்கை கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் அன்பழகன் (33) என்பவரின் நிலத்திலிருந்த மோட்டாா் கொட்டகையில் 792 மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இது தொடா்பாக அன்பழன், எறையனூா் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சீவி மகன் சதீஷ்குமாா் (33), புதுச்சேரி மாநிலம், கிழக்கு சாரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (55), காளிவேம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவி (47) ஆகியோரை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com