விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது
விழுப்புரம் நகரைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பெரிய தூறலுடன் கூடிய மழை பெய்த கொண்டிருந்தது.
விழுப்புரம் நகரைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பெரிய தூறலுடன் கூடிய மழை பெய்த கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம், சுற்றுவட்டாரப் பகுதிகளான வளவனூா், கோலியனூா், காணை, திருவெண்ணெய் நல்லூா், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, விழுப்புரம் நகரில் நீலத்தடி நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது. நீா் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக அனந்தபுரத்தில் 14 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com