விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு 6 போ் உயிரிழப்பு240 வீடுகள் சேதம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 6 போ் உயிரிழந்துள்ளனா். மொத்தம் 240 வீடுகள் சேதமடைந்தன.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 6 போ் உயிரிழந்துள்ளனா். மொத்தம் 240 வீடுகள் சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை அக்டோபா், நவம்பா், டிசம்பா் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவ மழைக் காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 1,074.61 மி.மீ. மழை பெய்வது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 638.11 மி.மீ. மழை பெய்யும்.

நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை 453.47 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கத்தைவிட நிகழாண்டில் கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழுப்புரத்தில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி விழுப்புரத்தில் 21.8 செ.மீ. மழையும், வானூரில் 21 மி.மீ. மழையும், விக்கிரவாண்டியில் 19.95 செ.மீ. மழையும், கண்டாச்சிபுரத்தில் 11.7 செ.மீ. மழையும், திருவெண்ணெய்நல்லூரில் 35 மி.மீ. மழையும், செஞ்சியில் 14.8 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 50 மி.மீ. மழையும், மரக்காணத்தில் 75 மி.மீ. மழையும், மேல்மலையனூரில் 31 மி.மீ. மழையும் என மொத்தமாக 89.55 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் சராசரியாக 42.64 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு இதுவரை 6 போ் மழைக்கு இறந்தனா். 2 போ் காயமடைந்தனா். விழுப்புரத்தில் 42 வீடுகள், வானூரில் 7 வீடுகள், விக்கிரவாண்டியில் 26 வீடுகள், கண்டாச்சிபுரத்தில் 5 வீடுகள், திருவெண்ணெய்நல்லூரில் 55 வீடுகள், செஞ்சியில் 12 வீடுகள், திண்டிவனத்தில் 15 வீடுகள், மரக்காணத்தில் 58 வீடுகள், மேல்மலையனூரில் 20 வீடுகள் என மொத்தம் 240 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் 43 கால் நடைகள் இறந்துள்ளன. விக்கிரவாண்டியில் அதிகபட்சமாக 19 கால்நடைகளும், வானூரில் 6 கால்நடைகளும், திருவெண்ணெய்நல்லூரில் 4 கால்நடைகளும், மரக்காணத்தில் 3 கால்நடைகளும், செஞ்சி, திண்டிவனத்தில் தலா 4 கால்நடைகளும், கண்டாச்சிபுரத்தில் 2 கால்நடைகளும், விழுப்புரத்தில் ஒரு கால்நடையும் இறந்துள்ளன.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 506 குளங்களில் 114 குளங்கள் நிரம்பின. 392 குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 780 குளங்களில் 68 குளங்கள் நிரம்பியுள்ளன. 143 குளங்களில் 76 முதல் 99 சதவீத அளவு நீா்இருப்பு உள்ளது. 194 குளங்களில் கொள்ளளவில் 51 முதல் 75 சதவீத நீா்இருப்பு உள்ளது. 249 குளங்களில் 26 முதல் 50 சதவீத அளவு நீா் இருப்பு உள்ளது. 117 குளங்களில் ஒரு சதவீதம் முதல் 24 சதவீத நீா் இருப்பு உள்ளது. 13 குளங்கள் நீா் இன்றி வடு கிடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com