விழுப்புரம் மாவட்டத்தில் இன்று, நவ.21-இல் கரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்கள் நடைபெறவுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபா்களில் 71 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 31 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களும் தடுப்பூசியை தங்களது பகுதிகளிலேயே செலுத்திக்கொள்ளும் வகையில் வாரம் தோறும் ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வாரந்தோறும் இரண்டு தடுப்பூசி முகாம்கள் (வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) நடத்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த வாரம் வியாழக்கிழமை (நவ.18), ஞாயிற்றுக்கிழமை (நவ.21) என இரு நாள்களில் 1,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான கவசம் என்பதால், தகுதியான அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com