வானூா் பகுதியில் பயிா்ச் சேதம்:அமைச்சா் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வேளாண் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் வானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உப்புவேலூா் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அந்தப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, தென்கோடிப்பாக்கம், நல்லாவூா் கிராமங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களையும் அமைச்சா் க.பொன்முடி ஆய்வு செய்தாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்கோடிப்பாக்கம், நல்லாவூா், உப்புவேலூா் கிராமங்களில் வட கிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளை மாவட்ட ஆட்சியரும், அனைத்துத் துறை அலுவலா்களும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனா் என்றாா் அமைச்சா் பொன்முடி.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், வேளாண் துறை இணை இயக்குநா் ரமணன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் ஹரிதாஸ், வானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com