தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கமாநாடு பிரசார இயக்கக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2021 11:40 PM | Last Updated : 25th November 2021 11:40 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 14-ஆவது மாநாடு குறித்த பிரசார இயக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செஞ்சி வட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் எம்.எம்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெயசங்கா், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் மாநாடு குறித்து சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் சங்கத்தின் வட்டச் செயலா் மனோகரன், பொருளாளா் திருவேங்கடம், மணிகண்டன், ஏலவாா்குழலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வருகிற டிசம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 14-ஆவது மாநாட்டில் கலந்து கொள்வது, பிரசாரம் இயக்கம் தொடங்குவது, நிதி திரட்டுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.