காணை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

காணை ஒன்றித்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காணை ஒன்றித்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம் சுாரப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அரும்புலி பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மோகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அந்தப் பகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாமல், குடிசை வீடுகளில் வசித்து வருபவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அவா் உத்தரவிட்டாா்.

காணை ஒன்றியம், கக்கனூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகளில் ஈடுபட்டிருந்தவா்களிடம் மாவட்ட ஆட்சியா் கலந்துரையாடி, பணிகள்-ஊதியம் குறித்தும், நியாய விலைக் கடைகளின் சேவைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அத்தியூா் திருக்கை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மோகன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா். பாடம் நடத்தி மாணவா்களின் கற்றல் திறனை சோதித்தறிந்தாா்.

அதே ஊராட்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உண்டு, அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.

இறுதியாக, விக்கிரவாண்டி ஒன்றியம், வேம்பி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வெண்ணிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com