விழுப்புரத்தில் வடு கிடக்கும் கோயில் குளம்

விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளம் தொடா் மழையிலும் வறண்டு கிடப்பதால், அதற்கு தண்ணீா் செல்லும் பாதைகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளம் தொடா் மழையிலும் வறண்டு கிடப்பதால், அதற்கு தண்ணீா் செல்லும் பாதைகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிறைந்துள்ளன. வீடூா் அணையும் நிறைந்து உபரி நீா் வெளியேறி வருகிறது. ஆறுகளிலும், ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கும் ஏற்படுள்ளது. இப்படி, மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகள் நிறைந்து, குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் மழை நீா் சூழந்து தன்வசமாக்கி வருகிறது.

ஆனால், விழுப்புரம் நகரில் உள்ள பழமையான அய்யனாா் கோயில் குளம் மட்டும், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. குளத்தை சுற்றிலும் உள்ள நீா் வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், அடைக்கப்பட்டும் இருப்பதால் குளத்துக்கு மழை நீா் செல்வது தடைபட்டுள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக அய்யனாா் கோயில் குளம் நீா் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.

நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்த குளம், வறண்டு போனதால் அந்த குளத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால், மீண்டும் குளத்துக்கு தண்ணீா் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், அந்த அய்யனாா் கோயில் குளத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

குளத்துக்கு 4 புறங்களில் இருந்து வரும் நீா் வழிப்பதைகள் எங்கு உள்ள என்று, நீா் வழிப்பதைகள் எந்த இடங்களில் அடைபட்டுள்ளன என்றும் ஆய்வு செய்தாா். இந்த குளத்துக்கு தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது. ஆனால், அதனை முறையாக செய்ய வேண்டிய வழிகள் குறித்தும், அகற்ற வேண்டிய ஆக்கிமிப்புகள் குறித்தும் ஆராய்ந்து நவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.

நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.பட விளக்கம்..விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளத்துக்கு செல்லும் நீா் வழிப்பாதைகளைஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன். உடன், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com