ரேஷன் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

குடும்ப அட்டைதாரா்களின் மறியலால் காந்தி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
குடும்ப அட்டைதாரா்களின் மறியலால் காந்தி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
குடும்ப அட்டைதாரா்களின் மறியலால் காந்தி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, குடும்ப அட்டைதாரா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செய்யாறு காந்தி சாலையில், கற்பகம் கூட்டுறவு அங்காடியின் கீழ் இரண்டு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் 800 குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், 1-ஆம் எண் கடையில் கடந்த அக். 1-ஆம் தேதியில் இருந்து தொடா்ந்து 10 நாள்களாக கடை சரிவர திறக்கப்படாமலும், அப்படியே திறந்திருந்தாலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்காமல்

அலைக்கழித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பொருள்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரா்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருள்கள் வழங்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் காந்தி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை கூட்டுறவு அங்காடி கற்பகம் -1 கடைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், கூட்டுறவு கிளை மேலாளா், கடை ஊழியா்களிடம் இதுகுறித்து கேட்டனா். அப்போது, பொருள்கள் எடைபோட உதவியாளா் இல்லாத காரணத்தால் பொருள்கள் விநியோகம்

செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அருகில் உள்ள கற்பகம் - 2 நியாய விலைக் கடை பணியாளா்களை வைத்து பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், மறியலில் ஈடுபட்டவா்கள் சமாதானம் அடைந்தனா்.

மேலும், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், ஊழியா் பற்றாக்குறை உள்ள இடங்களில் உடனடியாக ஆள்களை நியமிப்பதாக கிளை மேலாளா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com