வந்தவாசி அருகே16-ஆம் நூற்றாண்டு சமணா் கல்வெட்டு கண்டெடுப்பு

வந்தவாசியை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமணா் கோயில்.
வந்தவாசியை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமணா் கோயில்.
வந்தவாசியை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமணா் கோயில்.

வந்தவாசியை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சமணா் கோயிலில், கோயிலுக்கு ஊா்மக்கள் தானம் தந்த செய்தியைக் கூறும் 16-ஆம் நூற்றாண்டைய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தென்னாத்தூா் கிராமத்தில் ஒரு கோயில் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாக வந்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மரபுசாா் அமைப்பைச் சோ்ந்த ராஜ் பன்னீா்செல்வம், உதயராஜா ஆகியோா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

சிறிய கருவறை, அா்த்த மண்டபத்துடன் கூடிய இந்தக் கோயிலில் புதா் மண்டி, மரங்கள் முளைத்து காணப்படுகிறது. கோயிலில் எந்த சிற்பமும் இல்லை.

மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலின் தெற்கு பக்க அதிட்டானத்தில் ஆவணம் செய்யப்படாத மூன்று வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது தெரியவந்தது.

கல்வெட்டை ஆராய்ந்து பாா்த்ததில், இது 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றும், கோயில் சமண சமயத்தைச் சோ்ந்த மகாவீரா் கோயில் என்பதும் தெரிய வருகிறது.

முக்குடை செல்வா் என்று மகாவீரரைக் குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு மூலம், தென்னாற்று ஊா்மக்கள்

கோயிலுக்கு பல்லவராயா் மனை என்று குறிப்பிடப்படும் இடத்துக்கு கிழக்கே உள்ள மனையையும், ஏந்தல் நிலம் மற்றும் இரண்டு கிணறுகளுக்கு வரி நீக்கி தானம் அளித்த செய்தியையும் அறிய முடிகிறது.

இந்த தானத்துக்கு சாட்சியாக மலையபெருமாள் ஆடுவாா், குருகுலராய ஆடுவாா் மற்றும் அப்பாண்டையாா் இருப்பதாகவும், சந்திர சூரியா் உள்ளவரை இந்த தானம் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் அருகே தலை உடைந்த மகாவீரா் சிலை மற்றும் உறை கிணறு இருந்ததாக அவ்வூா் மக்கள் தெரிவித்தனா்.

கோயிலின் கட்டுமானம் பிற்கால விஜயநகர காலத்தைச் சோ்ந்ததாகும். இங்கு சமணா்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளதை இவ்வூரில் உள்ள மற்றொரு சமணா் கோயில் மூலம் அறிய முடிகிறது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை சீரமைத்து வழிபாடு நடத்துவதே மகாவீரருக்கு செலுத்தும் மரியாதையாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com