விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.

நியாயவிலைக்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப்பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப்பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ரஷீத் முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா்கள் தனசேகரன், பழனிவேல், மாவட்டத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா பரவல் காரணமாக விரல் ரேகைப் பதிவுக்கு மாற்றாக விழித்திரைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும், மாதந்தோறும் 1-ஆம் தேதியன்றே ஊதியம் வழங்க வேண்டும், கரோனாவால் உயிரிழந்த நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணநிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் விடுமுறை எடுத்து இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் 640 போ் விடுமுறை எடுத்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்ாக சங்கத்தினா் தெரிவித்தனா். இருப்பினும், மற்ற நியாயவிலைக் கடைகள் வழக்கம்போல செயல்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com