கல்வி உதவித் தொகை: பிற்படுத்தப்பட்டமாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளிட்ட செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் புதுப்பித்தல் செய்ய அக். 30-ஆம் தேதிக்குள்ளும், புதிதாக விண்ணப்பிப்பதாக இருந்தால் நவ. 5-ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். இதனை இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விவரங்கள், விண்ணப்பப் படிவங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீக்ங்ல்ற் என்ற அரசு இணைய தளத்தில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com